Saturday, 7 October 2017

2.ஓ 3டி மேக்கிங் ட்ரைலர்... வாவ்... ஆர்வத்தைத் தூண்டும் 'சிட்டி' ரஜினி!

இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தின் மூன்றரை நிமிட 3டி உருவாக்க முன்னோட்டப் படம் இன்று மாலை வெளியானது. இந்த முன்னோட்டத்தில் இளமையும், துடிப்புமாக வரும் ரஜினிகாந்த், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.



லைகா நிறுவனம் ரூ 400 கோடி செலவில் தயாரித்து வரும் படம் இது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். எமி ஜாக்ஸன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க லேட்டஸ்ட் 3 டி கேமிராவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி படமாக்கப்பட்டுள்ள முதல் படம் 2.ஓதான் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம், 3டியில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் முன்னோட்டப் படம் சற்று முன் யு ட்யூபில் வெளியிடப்பட்டது.

3 நிமிடம் 35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், 2.ஓவை ஏன் 3டியில் எடுத்தார்கள், அதில் இருந்த சவால்கள் குறித்து ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய் குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பணியாற்றிய ஹாலிவுட் கலைஞர்கள் சிலரும் சுருக்கமாகப் பேசுகின்றனர்

"இந்தக் கதைக்கபு 3டி தேவைப்பட்டது. அந்த தொழில் நுட்பத்தை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். படத்தில் ஒரு காட்சியை நானே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன், அத்தனை வியப்பாக உள்ளது," என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.



படத்தில் விஞ்ஞானி வசீகரன், ரோபோ சிட்டி என இரு வேடங்களில் ரஜினி வருகிறார். எந்திரனில் பார்த்த ரஜினியைவிட இந்தப் படத்தில் இன்னும் இளமையாகவும் ஸ்டைலாகவும் தோன்றுகிறார். மிக ஆபத்தான சண்டைக் காட்சிகளில் கயிற்றில் தொங்கியபடி அவர் சண்டையிடுகிறார்.






Friday, 17 March 2017

2.O ரூ 110 கோடி வியாபாரம்

டீசர் வெளியிடுவதற்கு முன்பே ரூ நூறு கோடியைத் தாண்டமுடியும் என்றால் அது தலைவர் (ரஜினி) படத்தால் மட்டுமே முடியும் என்று லைக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜூ மகாலிங்கம் ட்வீட் செய்துள்ளார். ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியுடன் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.



இன்னும் 2.0 படத்தின் டீசர், அல்லது புகைப்படங்கள் (இரண்டு மட்டுமே வெளியாகியுள்ளது) வெளியிடப்படாத நிலையில், படம் தொடர்புடைய வியாபாரங்கள் ஆரம்பித்துவிட்டன. தீபாவளிக்கு வெளிவரவுள்ள 2.0 படத்தின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளுக்கான முதல் 15 வருட தொலைக்காட்சி உரிமம், ஜீ குழுமத்துக்கு ரூ. 110 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது தெரிந்ததே. இது தொலைக்காட்சி உரிமம் மட்டும்தான். அதுவும் 15 வருடங்களுக்கு மட்டும்தான். டிஜிடல் உரிமங்களுக்காக அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டி போடுவதாக லைக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜூ மகாலிங்கம் கூறியுள்ளார். மேலும் அவர் ட்விட்டரில் இதுகுறித்த செய்தி ஒன்றைப் பகிர்ந்து, 'நம்ம தலைவரால் (ரஜினி) மட்டுமே டீசர் வெளியிடுவதற்கு முன்பே நூறு கோடியைத் தாண்டமுடியும்,' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதிக்கட்டத்தில் ரஜினியின் 2.ஓ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ரூ 350 கோடி செலவில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது 2.ஓ. ரஜினியுடன் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது.
 


இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில்தான் எமி ஜாக்சன், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டதாக அறிவித்திருந்தார். இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அந்த காட்சிகள் படமாக்கியவுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்றும் ஷங்கர் அறிவித்துள்ளார். மேலும், '2.ஓ' படத்திற்காக எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி படமானவுடன் படக்குழுவினருடன் ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படைத்தையும் வெளியிட்டுள்ளார். 2017 தீபாவளி வெளியீடாக வருகிறது 2.ஓ!

Wednesday, 23 March 2016

2.ஓ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள்... அதிர்ச்சியில் ஷங்கர்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரமாண்ட படமான 2.ஓ படத்தின் ஸ்டில்கள் திடீரென இணையத்தில் வெளியாகிவிட்டன. இது ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரை அதிர வைத்துள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 2.ஓவின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது.


பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். இப்படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் உபயோகிக்கக்கூடாது, கேமரா பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை படத்தில் ரஜினியின் தோற்றம், ரோபோக்கள் தோற்றம், அக்ஷய் குமார் கெட்டப் என எதுவும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அக்ஷய் குமார், ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் அக்ஷய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சில படங்களை யாரோ இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். மிக வித்தியாசமான உயிருள்ள ரோபோ போன்ற தோற்றத்தில் அக்ஷய் காட்சி தருகிறார். எந்திரனில் புரொபஸர் போரா உருவாக்கும் கறுப்பு நிற ரோபோவின் உயிருள்ள வடிவமாக இதில் அக்ஷய்யைப் பார்க்க முடிந்தது. இந்தப் படம் வெளியானது இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட குழுவினருக்கு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. 

Saturday, 19 March 2016

ரஜினியின் 2.ஓதான் இவ்ளோ பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் Insurance செய்யப்பட்ட ஒரே படம்!

ரஜினியின் 2.ஓ படம் ரூ 330 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் Cinema மிகப் பிரமாண்ட படமாக உருவாகிறது ரஜினியின் 2.ஓ. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ரூ 350 கோடி பட்ஜெட் Budget. அதற்கும் மேலே கூட ஆகும் என்கிறார்கள்



படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்காக ரஜினி Rajini, இயக்குனர் Director ஷங்கர் மற்றும் ‘2-ஓ' படக்குழுவினர் டெல்லி சென்று இருக்கிறார்கள். சுமார் ஒரு மாதம் இங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் ‘2-ஓ' படம் தமிழ் பட வரலாற்றில் முதன் முறையாக ரூ.330 கோடிக்கு இன்சூரன்சு செய்யப்படுகிறது. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் New India Assurance, ஓரியண்டல் இன்சூரன்ஸ் Oriental insurance, யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் United India Insurance ஆகிய நிறுவனங்களில் இந்த படம் இன்சூரன்ஸ் செய்யப்படுகின்றது. ஏற்கெனவே சில படங்கள் இப்படி இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட படம் 2.ஓதான் 2O என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 2.ஓ படத்துக்கு டிசைன் - நெட்டிசன்கள்

எந்திரன் 2ம் பாகமாக தயாராகும் இந்தப் படத்தின் நடிகர் நடிகைகள் பட்டியல், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.



படத்திற்காக பின்னி மில்லிலும், கிழக்க கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவிலும் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. படத்தின் கதை பற்றியோ, ரஜினியின் கேரக்டர் பற்றியோ இதுவரை ஷங்கர் சொல்லவில்லை. என்றாலும் படத்தின் துவக்க நிகழ்ச்சிக்கு ரஜினி எந்திரனில் வந்த விஞ்ஞானி வசீகரன் கெட்அப்பில் வந்தார். எனவே 2.0வில் வசீகரன் கேரக்டர் தொடர்கிறது என்பது உறுதியாகி உள்ளது.

படத்திற்கான தலைப்பு டிசைனோ, பர்ஸ்ட் லுக் போஸ்டரையோ ஷங்கர் வெளியிடவில்லை. ஆனால் அதற்குள் கிடைத்திருக்கிற தகவல்களை கொண்டு ரஜினியின் தீவிர ரசிகர்களான நெட்டிசன்கள் தாங்களே செய்த டிசைன்களை வெளியிட்டுள்ளனர். ஒரிஜினல் டிசைன்கூட இப்படி இருக்குமா என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிற அளவிற்கு அந்த டிசைன்கள் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Monday, 7 March 2016

ராணுவத்துடன் ரஜினி மோதும் காட்சிகள்



ரஜினியின் அடுத்த பிரமாண்ட படமான 2.ஓவின் முக்கிய காட்சி ஒன்றிற்காக டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார் இயக்குநர் ஷங்கர். ஷங்கர் மூன்றாவது முறையாக இங்கு தனது படப்பிடிப்பை நடத்துகிறார். 2.ஓ படத்தில் ராணுவ வீரர்களுடன் ரஜினி மோதும் முக்கிய காட்சி இந்த மைதானத்தில் இடம்பெறுகிறது.

பெரோஷா கோட்லா இதற்காக பல இடங்களைத் தேடிய ஷங்கருக்கு, கடைசியில் டெல்லி பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானம்தான் சரியாக அமைந்தது. இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த பெரும் முயற்சிக்குப் பிறகு அனுமதி பெற்றார் ஷங்கர்.

ரோபோ - அக்சையுடன் மோதல்

ரோபோவுடன் வில்லனாக நடிக்கும் அக்சைகுமாருடன் ராஜின் மோதும் பிரமாண்ட சண்டை காட்சியை படமாக்குகிறார். அதே போல ராணுவத்துடன் ரஜினி மோதும் சண்டை காட்சிகளும் படமாகின்றன 

இதற்கு முன்பு இதே மைதானத்தில்தான் காதலன், பாய்ஸ் படங்களின் படப்பிடிப்பை நடத்தினார் சங்கர்

 டெல்லியில் படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்க உள்ளது. இந்த 25 நாட்களும் ரஜினி டெல்லியில்தான் தங்கியிருப்பார்